Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 11 April 2013

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாகப் படிக்கலாம்!


கலை, அறிவியல் கல்லூரிகளில் ஏழை மாணவ, மாணவிகள் இலவசமாகப் பட்டப்படிப்பைப் படிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது சென்னைப் பல்கலைக்கழகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் மாணவர் இலவசக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் சேர, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

ஆதரவற்றவர்கள், விவசாயக் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் குழந்தைகள், முதல் தலைமுறை பட்டப் படிப்பு படிக்கவிருக்கும் மாணவர்கள், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பெற்றோரின் வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்தச் சலுகையைப் பெற விரும்புபவர்கள், விண்ணப்பத்தை சென்னைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். www.unom.ac.in  என்ற இணையதளத்தில் இருந்து பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை தக்க சான்றுகளுடன், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் 10 நாட்களுக்குள் பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments: