ஆசிரியர் பணியில் ஆர்வம் மிக்கவர்களா நீங்கள்? கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற ஆவல் நிரம்பியவரா? உங்களது சேவை நோக்கத்திற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது சென்னையைச் சேர்ந்த டீச்சர்ஸ் லேப் அமைப்பு.
இந்த அமைப்பின் சார்பில் ‘டீச்சிங் ஃபெல்லோஷிப்’ என்ற பயிற்சித் திட்டத்தை நடத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 30 பேரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சியளித்து, தாங்கள் நடத்தி வரும் பள்ளியிலேயே ஆசிரியர்களாக நியமித்துக் கொள்கிறது. ஃபெல்லோஷிப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவோர், உரிய பயிற்சிக்குப் பிறகு, ஸ்ரீராம் அறக்கட்டளையால் சென்னை மற்றும் ஆந்திர மாநிலங்களில் நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்படுவார்கள்.
ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள், 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த ஃபெல்லோஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் முறை, அவர்களுடன் கலந்து பழகும் விதம், ஆக்கப்பூர்வமான செயல்களைத் தூண்டும் வகையிலான கல்வி முறை, வகுப்பறையில் மாணவர்களிடம் நடந்து கொள்ளவேண்டிய வழிமுறை என்று பலதரப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்தப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு துவக்கத்தில் இரண்டு முதல் 12 மாதங்களுக்கு பயிற்சியளிக்கப்படும். பின்னர் இரண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு நாகப்பட்டினம், காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள டீச்சர்ஸ் லேப்புக்குச் சொந்தமான பள்ளிகளில் கற்பிக்கும் பணியில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படும்.
ஆரம்பப் பயிற்சிக்காலத்தில், பயிற்சியாளர்களுக்கு மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும். ஆசிரியர்களாக அவர்கள் பணி அமர்த்தப்பட்ட பிறகு, தகுதி மற்றும் பணி முறைக்கேற்ப மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும்.
கல்லூரிப் படிப்பை சமீபத்தில் முடித்தவர்களும் இந்த ஃபெல்லோஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமே அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 01.02.2013
விவரங்களுக்கு: www.theteacherslab.org.ina
No comments:
Post a Comment