ஜூன்3ல் ஆசிரியர் தகுதி தேர்வு
சென்னை, மார்ச் 7:ஜுன் மாதம் 3ந் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் வருகிற 22ந் தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.
| |
. | |
மத்திய அரசின் உத்தரவின்படி அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.அதன்படி தமிழ்நாட்டில் 2382010ந் தேதி அன்றோ அதற்கு பின்னரோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதிதேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை 5 ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.
சுயநிதி பள்ளிகளில் பி.எட். படிக்காமல் பணிபுரியும் ஆசிரியர்கள் 5 வருடங்களுக்குள் பி.எட்.படிக்கவேண்டும். பின்னர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.1வது முதல் 8வது வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டும். பிளஸ்2 படித்துவிட்டு 2 வருட ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியராக பணிபுரிபவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் தாள் பரீட்சையை எழுதவேண்டும். பி.எட். படித்தவர்கள் 2வது தாள் பரீட்சையை எழுதவேண்டும். சில தனியார் பள்ளிகளில் 1முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் தாளையும் எழுதவேண்டும்., 2வது தாளையும் எழுதவேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பம் மார்ச் 22ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கிடைக்கும். விண்ணப்பம் கொடுக்கும் போது அதில் ஒரு வங்கிச்செல்லான் இருக்கும். அதை யாரும் தொலைக்காமல் பத்திரமாக வைத்து அந்த செல்லானை பூர்த்தி செய்து சூஸ்டேட் பாங்க்’கில் ரூ.500 செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். அவ்வாறு ஒப்படைக்க ஏப்ரல் 4ந்தேதி கடைசி நாள். தேர்வு ஜுன் மாதம் 3ந் தேதி நடைபெறுகிறது. தேர்வில் ஆப்ஜெக்ட் முறையில் கேள்விகள் இருக்கும். அதாவது ஒரு கேள்விக்கு 4 பதில் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று மட்டும் சரியானதாக இருக்கும். 3 பதில்கள் தவறாக இருக்கும்.ஆசிரியர் தேர்வு எழுத பாடத்திட்டம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு தேதி இப்போதைக்கு தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சில நாட்கள் முந்தவும் சில நாட்கள் பிந்தவும் வாய்ப்பு உள்ளது. தேர்வை 7 லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 8 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன |
No comments:
Post a Comment