Monday, 30 April 2012
Sunday, 29 April 2012
TNPSC
| |||||||||||||||||||
| Current Notifications | |||||||||||||||||||
| |||||||||||||||||||
Wednesday, 25 April 2012
G.O Ms.No.56 Dt : April 24, 2012
| G.O Ms.No.56 Dt : April 24, 2012 |
Public
Services – Equivalence Committee – Degree of Bachelor of Education B.Ed
(Special Education) equivalence to Bachelor of Education B.Ed.(General
Education) – Recommendation of the Equivalence Committee – Orders –
Issued.
|
Sunday, 22 April 2012
மத்திய அரசுப் பணிகளில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!
|
விஷ்வபாரதி
மத்திய அரசுத் துறைகளில் பல்வேறு பணிகளில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் ஒருங்கிணைந்த போட்டித் தேர்வை எழுத வேண்டும். மத்திய பொதுப் பணித் துறை, புலனாய்வுத் துறை, மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, ரயில்வே துறை, மத்திய வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, மத்திய அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவியாளர்கள் பணி, ஆடிட்டர், கணக்கீட்டாளர், இளநிலை கணக்கீட்டாளர் போன்ற பல்வேறு பதவிகளில் காலிப் பணியிடங்கள் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த போட்டித் தேர்வை எழுத பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கம்பைலர் பணியில் சேர விரும்பும் மாணவர்கள் பொருளாதாரம், கணிதம், புள்ளியியல் ஆகிய பாடங்களை கட்டாயப் பாடமாகவோ அல்லது விருப்பப் பாடமாகவோ படித்திருக்க வேண்டும். ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வஸ்ட்டிக்கேட்டர் கிரேட்-2 பணியில் சேர விரும்புபவர்கள் புள்ளியியலை முக்கியப் பாடப்பிரிவாக எடுத்துப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணிதத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்து புள்ளியியலையும் ஒரு பாடமாக எடுத்துப் படித்த பட்டதாரி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பொருளாதாரம் அல்லது வணிகவியல் பாடத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்து புள்ளியியலை ஒரு பாடமாக எடுத்துப் படித்த பட்டதாரி மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மற்ற பணியிடங்களுக்கு ஏதாவது பட்டப் படிப்புப் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவியாளர் (சிஎஸ்எஸ்) பணியிடங்களுக்கு கம்ப்யூட்டர் அறிவு கட்டாயத் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதரத் தகுதி விவரங்கள், ஸ்டாப் செலக்ஷன் இணைய தளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு எப்படி நடைபெறுகிறது?
இந்தத்
தேர்வு மூன்று அடுக்குகளாக நடைபெறும். முதல் இரண்டு அடுக்குத்
தேர்வுகளும் எழுத்துத் தேர்வுகள். இத்தேர்வுகளில் அப்ஜெக்ட்டிவ் முறையில்
கேள்விகள் இருக்கும். இதையடுத்து நேர்முகத் தேர்வு, கம்ப்யூட்டர் திறன்
சோதனை பர்சனாலிட்டி டெஸ்ட், ஸ்கில் டெஸ்ட் இவற்றில் பணிகளைப் பொருத்து
தேவையான தேர்வுகள் நடத்தப்படும். ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வஸ்ட்டிக்கேட்டர்
கிரேடு-2 பணி அல்லாத மற்ற பிரிவுக்கான முதல் அடுக்குத் தேர்வில் ஜெனரல்
இன்டலிஜென்ட்ஸ், ஜெனரல் அவேர்னெஸ், குவாலிட்டேட்டிவ் ஆப்டிட்யூட்,
இங்க்லீஷ் காம்ரிஹென்சன் ஆகிய பிரிவுகளில் அப்ஜெக்ட்டிவ் முறையில் 200
கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் கட்டத் தேர்வில் இரண்டு பிரிவுகள் உண்டு.
முதல் பிரிவில் குவாண்டிடேட்டிவ் எபிலிட்டிஸ் குறித்த கேள்விகளும்,
இரண்டாவது இங்க்லீஷ் லாங்க்வேஜ் அண்ட் காம்ப்ரிஹென்சன் குறித்த கேள்விகளும்
கேட்கப்படும். முதல் அடுக்குத் தேர்வுக்கு இரண்டு மணி நேரமும் அதையடுத்த
இரண்டு பிரிவுத் தேர்வுகளுக்கும் தலா 2 மணி நேரமும் வழங்கப்படும்.
பார்வையற்றவர்களுக்கு கூடுதலாக 40 நிமிடங்கள் வழங்கப்படும். இதையடுத்து
நேர்முகத் தேர்வும் உதவியாளர் (சிஎஸ்எஸ்) பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு
கம்ப்யூட்டர் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.
கம்பைலர் பணி அல்லாத மற்ற (நேர்காணல் இல்லாத) பணியிடங்களுக்கு முதல் அடுக்கு இரண்டாம் அடுக்குத் தேர்வுகள் இருக்கும். அதையடுத்து, டாக்ஸ் அசிஸ்டென்ட் பணியில் சேருபவர்களுக்கு டேட்டா என்ட்ரி ஸ்கில் டெஸ்ட் இருக்கும். ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வஸ்ட்டிக்கேட்டர் கிரேடு-2 பணிக்கு முதல் அடுக்குத் தேர்வும் இரண்டாம் அடுக்குத் தேர்வும் இருக்கும். இந்த விண்ணப்பதாரர்கள் இரண்டாம் அடுக்குத் தேர்வில் மூன்றாவது தாளாக புள்ளியியல் தேர்வை எழுத வேண்டியதிருக்கும். அதையடுத்து இந்த விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இந்த எழுத்துத் தேர்வுகளில் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. எப்போது தேர்வு நடைபெறுகிறது?
பல்வேறு
மாநிலங்களில் பல்வேறு நகரங்களில் இந்தப் போட்டித் தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் கோயமுத்தூர், சென்னை, மதுரை, திருநெல்வேலி,
திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது.
முதல் அடுக்கு தேர்வு வருகிற ஜூலை 1ம் தேதியும் ஜூலை 8ம் தேதியும் நடைபெறும். இரண்டாம் அடுக்குத் தேர்வில் மூன்றாம் தாளான புள்ளியியல் தேர்வு, செப்டம்பர் 15ஆம் தேதியும், குவாண்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் தேர்வான முதல் தாள் செப்டம்பர் 16 ஆம் தேதி காலையிலும், ஆங்கில மொழித் திறனுக்கான இரண்டாம் தாள் செப்டம்பர் 16ம் தேதி பிற்பகலிலும் நடைபெறும். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
இந்தப்
போட்டித் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100. விண்ணப்பத்தை தபாலில்
அனுப்பும் விண்ணப்பதாரர்கள், ரூ.100க்கான சென்ட்ரல் ரெக்ரூட்மெண்ட் ஃபீஸ்
ஸ்டாம்ப்பை விண்ணப்பத்தில் ஒட்டி, அனுப்ப வேண்டும். அந்த ஸ்டாம்பில் தபால்
அலுவலரால் குறுக்கே கோடிட்டிருக்க வேண்டும். காசோலை, வரைவோலை மற்றும்
மணியார்டர் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தக்கூடாது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையின் ஆன்லைன் மூலமாகவோ செலானாகவோ செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். இந்த ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: ஏப்ரல் 20. விவரங்களுக்கு :www.ssc.nic.in |
UPSC -e - Admit Card
For Press Note Hindi Click
Here
For Downloading of e-Admit Card for
Civil Services (Preliminary) Examination 2012, please
Click
Here
PRESS
NOTE
Union Public Service Commission will be conducting the Civil Services
(Preliminary) Examination 2012 on 20/05/2012 (Sunday) all over India. The
Commission has uploaded the e-Admission Certificate for the convenience
of the admitted candidates (or the reasons/ grounds for rejection of application
in respect of rejected applications) on its website (http://www.upsc.gov.in.).
The candidates are advised to download their e-Admission Certificate and take a
printout thereof. The admitted candidates will have to produce the printout of
their e-Admission Certificate at the allotted venue for appearing in the
examination. In case the photograph is not visible or available on the
e-Admission Certificate, candidates are advised to carry two (2) identical
photographs (one photograph for each session) along with proof of Identity such
as Identity Card or Voter Identity Card or Passport or Driving License and the
printout of e-Admission Certificate at the venue of the Examination. No
paper Admission Certificate will be issued for this examination.
The candidates are advised to take a printout of the e-Admission
Certificate (or the reasons/ grounds for rejection of application in respect
of rejected applications) well in advance (by 16th of May, 2012)
to avoid the last minute rush. In the past, cases have been noticed where
some candidates have faced difficulty in accessing the server at the last
minutes on account of server overload.
In case of any discrepancy, the same may be communicated to the
Commission immediately by email (email ID
uscsp-upsc@nic.in) latest by 30th April, 2012 to enable
the Commission to take a decision in the matter.
Candidates are also advised to bring Black Ball Point Pen to
the examination hall on the day of examination.
MOBILE PHONES
BANNED
(a) Mobile
Phones, Pagers or any other communication devices are not allowed inside the
premises, where UPSC Examination is being conducted. Any infringement of
these instructions shall entail disciplinary action against the concerned
candidates including ban from future Examinations/Selection.
(b) Candidates
are advised in their own interest not to bring any of the banned items
including mobile phones/pagers to the venue of the examination, as
arrangements for safekeeping cannot be assured.
|
Union Public Service Commission
New
Delhi-110069, 21 April, 2012/ 01 Chaitra, Saka 1934
For Downloading of e-Admit Card for
Civil Services (Preliminary) Examination 2012, please
Click
Here
NATIONAL BORD OF EXAMINATIONS
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ONLINE APPLY |
அதிர வைக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு!
-முனைவர், பி.இரத்தின சபாபதி,
கடந்த
இரண்டு திங்களாக நாளிதழ்களிலும் நூல் விற்பனை நிலையங்களிலும் வெகுவாகப்
பேசப்படுவது ஆசிரியர் தகுதித் தேர்வு. ஓராண்டு, இரண்டாண்டு எனப் பணிப்
பயிற்சி பெற்று ஆசிரியர் பட்டய, பட்டச் சான்றுகள் எல்லாம் முழுமையான
பயனைத் தராது ஆசிரியப் பணிக்குச் செல்வதற்கு. பணிக் கல்வி பெற்ற பின்னரும்
மீண்டும் தகுதித் தேர்வினை எழுதி 60% மதிப்பெண் வாங்க வேண்டிய கட்டாய
நிலை.
ஆசிரியர் தகுதித் தேர்வு
ஏன்? தகுதியான ஆசிரியர்களை அடையாளங் காணுவதற்காக என்று சொல்லப்படுகிறது.
அப்படியானால் இரண்டாண்டு, ஓராண்டு பாடத்திட்டம் வகுத்து மாநிலக் கல்வி
வாரியத்தாலும், பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்பட்ட ஆசிரியர் கல்விப்
பயிற்சி ஆசிரியர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்க முடியவில்லை என்பதுதானே
பொருள்!
இவையெல்லாம்
தகுதிப்படுத்த முடியாத நிலையில் 150 வினாக்களைக் கொண்டு நடத்தப்படும்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மட்டும் மிகுந்த வல்லமையுள்ளதா? இது
பொறுப்புள்ள கல்வியாளர் முன் நிற்கும் கேள்வி. "தாயை நீ தண்ணீர் கரையில்
பார்த்தால் மகளை வீட்டிலா பார்க்க வேண்டும்?' என்பது முதுமொழி. ஆசிரியர்
தகுதித் தேர்வின் "தகுதியினையும் பெருமையினையும்' ஏன் சிறப்பினையும்
தெரிந்து கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் தந்துள்ள மாதிரி
வினாத்தாள்களே முதன்மையான சான்றுகள்.
மாதிரிகளாகக் கொடுக்கப்பட்டுள்ள இரண்டில் தாள் 1 பட்டயப் படிப்பு
ஆசிரியர்களுக்கு உரியது. பட்டப் படிப்பு ஆசிரியர்கள் இரு தாள்களையும்
எதிர்கொள்ளலாம். இரண்டு வினாத் தாள்களிலுமே தேர்வருக்கான தொடக்கநிலைக்
குறிப்புகள் ஆங்கிலத்திலேயே தரப்பட்டுள்ளன. நாடெங்கும் ஆங்கில மோக அலை
வீசுகின்றபோது, அது வினாத்தாள் குறிப்புப் பகுதியிலும் இருக்கத்தான்
செய்யும். எனினும் வாழ்க்கைப் பணியைத் தீர்மானிக்கின்ற ஒரு தேர்வுத் தாளை
எதிர்கொள்ளும் ஒருவருக்கு "எடுத்த எடுப்பிலேயே ஆங்கிலமா?' என்னும்
மலைப்புத் தோன்றாமலிருக்க முடியாது.
150 பலவுள் தெரிவு (Multiple choice) வினாக்களை
90 நிமிடத்தில் எழுதி முடிக்க என்ற குறிப்பு வினாத் தாள்களில்
காணப்படவில்லை. எனினும் தேர்வு தொடர்பான வினாக் குறிப்பில் தேர்வுக்கால
அளவு குறிக்கப்பட்டுள்ளது. தாள் ஒன்று, 23 பக்கங்களைக் கொண்டுள்ளது. தாள்
இரண்டு, 39 பக்ககங்கள் கொண்டுள்ளது.
இவற்றையெல்லாம்
புரட்டிப் பார்த்து 90 நிமிடங்களில் சராசரித் திறனுடையோர் விடையளிப்பது
இயலாதுதான். அடுத்து, வினாக்களின் தன்மைகளைப் பார்ப்போம். 150 வினாக்கள்
அனைத்தும் பலவுள் தெரிவு வினாக்கள், மத்திய அரசுப் பாடத்திட்ட, பள்ளி
ஆசிரியர் தகுதித் தேர்வினைப் போன்றே இத்தேர்வுகளும் 150 வினாக்களைக்
கொண்டுள்ளன. புறவய வினாக்களும் (Objective questions) பலவுள் தெரிவு வினாக்கள் உயர்நிலை ஏலுமைகளை (Higher order abilities) தேர்ந்தறிவதற்குப்
பொருத்தமானவை; தகுதியானவை. ஆசிரியர்கள் உயர் இயலுமை கொண்டவர்களாக எனத்
தேர்ந்தறிய பலவுள் தெரிவு வினாக்கள் கொண்ட தகுதித் தேர்வு
பொருத்தமுடையதுதான்.
ஆனால்
கொடுக்கப்பட்டுள்ள வினாத்தாள்கள் இரண்டிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு
சில வினாக்கள் தவிர பிறவெல்லாம் நினைவாற்றலையும் மனப்பாடத் திறனையும்
சோதிப்பதாகவே உள்ளன. ஆகவே தகுதித் தேர்வின் தாள் ஒன்றை எதிர் கொள்ளுபவர்
ஐந்து வகுப்புகளுக்காக கற்பித்தல் திறனைப் பொறுவதைவிட, அவ் வகுப்புகளுக்கு
அனைத்துப் பாட நூல்களிலுள்ள (கணிதம் தவிர) தகவல்களை நினைவில் வைத்திருக்க
வேண்டும். இவ்வாறு எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம்? ஆங்கிலப்
பகுதியிலுள்ள வினாக்கள் இதற்கு விலக்காய், மொழித் திறனுக்கு முதன்மை
கொடுப்பதாகக் காணப்படுகின்றன. ஆனால் அவ்வினாக்கள் ஆங்கிலமே நமது வழியில்
குறுக்கிடக் கூடாது என்னும் உறுதியில் பி.லிட். பட்டம் மாணவர்கள் நெருங்க
முடியாதவாறு உள்ளன. தமிழ்நாட்டில் தமிழை விரும்பிப் படித்தவர்கள்
"பாவப்பட்டவர்கள்'.
தகவல்களை
மிகுதியாக நினைவில் வைத்துக் கொள்பவர்களுக்கு இத்தேர்வு
விரும்பத்தக்கதாய் இருக்கும். ஆனால் அறிவாற்றலை வெளிப்படுத்துவோருக்கு
அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது என்பதற்குப் பல வினாக்கள் சான்றுகளாகத்
திகழ்கின்றன. இதற்கான பல எடுத்துக் காட்டுகளை மாதிரி வினாக்களில் காண
முடியும். "ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுதல் (அ) யமகம், (ஆ)
சிலேடை, (இ) அந்தாதி, (ஈ) இரட்டுற மொழிதல்' இவ்வினாவில் ஆ,இ என்பன
இரண்டுமே பொருந்திய விடைகளுக்குரிய எழுத்துகள். இப்புறவய வினாவில் வினாப்
பண்பாகிய புறவயத்தன்மை இல்லை. "கற்றலின் முக்கிய காரணிகளுள் ஒன்று. (அ)
தக்க வைத்தல் (ஆ) நாட்டம் (இ) கவனித்தல் (ஈ) கவர்ச்சி' இவ்வினாவில் உள்ள
நான்கு தெரிவுகளுமே பொருத்தமான விடைகள்தாம். புறவய வினாக்களின் முக்கியப்
பண்பு ஏற்புமை. அது இவ்வினாவில் இல்லை.
"வெகுநாட்கள்
நமது நினைவில் நிற்பவை (அ) படித்துக் கற்றல் (ஆ) கேட்டுக் கற்றல் (இ)
புலன் வழிக் கற்றல் (ஈ) பார்த்துக் கற்றல்' இந்த வினா மிகவும்
வேடிக்கையானது.படித்தல் , கேட்டல் , பார்த்தல் என்பனவெல்லாம் புலன் சாராத
செயல்களா? மேலும் கற்றல் பாங்கு (Learning style) ஆளுக்கு ஆள் மாறும் என்பதை இவ்வினாத் தயாரித்தவர் அறியவில்லை. இவ்வினாவிலும் நான்கும் பொருந்திய விடைகளே.
ஆண்டுகளையும்
புள்ளி விவரங்களையும் கேட்டு மாணவர்களை அதிர வைப்பது சமூக அறிவியல்
ஆசிரியர் விருப்பம் போலும்! தாள் இரண்டில் உள்ள 60 சமூக அறிவியல்
வினாக்களில் 10 எண்களை நினைவில் வைத்து ஆண்டுகளையும் புள்ளி விவரங்களையும்
கொண்டனவாகும். மாதிரி வினாத் தாள்கள் மட்டுமல்ல, அவற்றுக்கு ஊற்றுக்
காலாய் அமையும் பாடநூல்களிலும் பன்முக நோக்கங்களை நிறைவு செய்ய வேண்டிய
பலவுள் தெரிவு வினாக்கள் பயனற்றதாகக் காணப்படுகின்றன.
வகுப்பிற்கேற்ற தரத்தையோ (Ability level), எந்த நோக்கத்துக்காகக் கேட்கப்படுகிறதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றத் தக்கதாகவோ (Validity), வினாவுக்கு விடையளித்த தேர்வர் பெற்ற மதிப்பெண்ணுக்கு அவர் தகுதியுடையவர் என உறுதிப்படுத்துவதாகவோ (Reliabilty) பாட
நூல்களில் பலவுள் தெரிவு வினாக்கள் இல்லை. கற்றல் பாடப் பொருளை
வழங்குவதில் நூலாசிரியர்கள் வெளிப்படுத்தியுள்ள வல்லமை, வினாக்களை
வடிவமைத்துக் கொடுப்பதில் காணப்படவில்லை.
இவ்வாறாக
குறைபாடுடைய மாதிரி வினாத்தாள்கள், பொருத்தமில்லாத வினாக்களைக் கொண்டுள்ள
பாடநூல்கள் இவற்றின் அடிப்படையில் பயிற்சிக் கையேடுகள், புற்றீசலாய்ப்
பெருகி வருகின்றன இப்போது. நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளின்
மாதிரி வினாத்தாள்களையும் பாடநூல்களையும் பகுத்தாய்ந்து காட்டப்பட்ட
பிறழ்வுகள் தவறுகளைச் சுட்ட வேண்டும் என்னும் நோக்கத்திலன்று. ஆசிரியர்
தகுதியைக் கண்டறிய தரமான வினாக்கள் தயாரிக்கப்பட வேண்டும்; தரமுடைய
ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
நன்றி : தினமணி
Saturday, 21 April 2012
TNPSC தேர்வுகள் பற்றி SMSல் தகவல் பெறலாம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவு செய்யும்
விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்த
வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பதிவு செய்யும்
விண்ணப்பதாரர்களுக்கு தேர்வாணையத்தின் தேர்வுத் தேதிகள் உள்ளிட்ட தகவல்கள்
இ-மெயில் மூலமோ எஸ்.எம்.எஸ். மூலமோ வந்து சேரும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு இந்தியாவிலேயே முதன் முறையாக ஆன்லைனில் நிரந்தரப் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தப்பதிவு எந்த ஒரு பணிக்கான தேர்வுக்குரிய விண்ணப்பமாகக் கருதப்படமாட்டாது. தேர்வாணையத்தால் அறிவிக்கப்படும் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையவழியைப் பயன்படுத்த இந்தப் பதிவு உதவியாக இருக்கும். அத்துடன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் தேர்வு முடிவுகள், காலிப்பணியிடங்கள் விவரம், தேர்வு தேதிகள் குறித்த விவரங்கள் முன்கூட்டியே எஸ்.எம்.எஸ். வாயிலாகவோ, இ-மெயில் மூலமோ அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு தனியான அடையாள எண் (லாக் இன்) கொடுக்கப்படும். அதனுடன் தனியாக ரகசியக் குறியீடு எண்ணும் (பாஸ்வேர்டு) வழங்கப்படும். இதில் விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்கள் அதாவது, பெயர், விலாசம், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, இ-மெயில் முகவரி தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்படும் இந்த பிரத்யேக அடையாள எண்ணைப் பயன்படுத்தி இணையவழி தகவல்களை ஐந்து ஆண்டுகளுக்கு பெறலாம். இணைய தளத்தில் பதிவு செய்வதற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை தமிழகம் முழுவதிலும் உள்ள இந்தியன் வங்கியின் கிளைகளிலும் அல்லது அஞ்சல் நிலையங்களிலும், கடன் அட்டைகள் மூலமாகவும் கட்டணம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதள வசதியை கிராமத்தில் உள்ளவர்களும் பெறும் வகையில் 500க்கும் மேற்பட்ட உதவி மையங்களை ஏற்படுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இந்த இணையதளத்தில் பதிவு செய்திருப்பவர்கள் அடுத்து வர இருக்கும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். இனி வரும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பங்களை, ஆன்லைனில் அனுப்புவதற்கான வசதிகளைச் செய்வதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார் தேர்வாணையத் தலைவர் ஆர்.நட்ராஜ். அந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் போது ஹால் டிக்கெட்டுகளையும் இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் நேரடியாக டவுன்லோடு செய்துகொள்ளவும் வசதிகள் செய்யப்படும். |
TNTET- புதிய தலைமுறை கல்வி
குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் – 3 : CHILD DEVELOPMENT AND PEDAGOGY
வளர்ச்சிப் பருவங்கள்
சமூகத் தன்மையை வளர்க்கும் காரணிகள் - கட்டூக்கம், குழு ஊக்கம், பணி ஊக்கம்.
• வார்தா எனும் ஆதாரக் கல்வித் திட்டம் எப்போது முடங்கிப்போனது -1950. • வார்தா எனும் ஆதாரக் கல்வித் திட்டத்தை எதை மனதில் வைத்துக்கொண்டு காந்தி தொடங்கினார் - இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமான கிராம முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்துதான். • மனிதனின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் கருவியாக காந்தி முன்னிறுத்துவது எதை - கல்வி. • கல்வியின் குறிக்கோளாக காந்தி உணர்த்துவது - தன்னையும், தன் குடும்பத்தினரையும் காப்பாற்றும் கருவி; பண்பாட்டினைப் பாதுகாக்கும் அறன்; நன்னடத்தையை வளர்க்கும், குடியுரிமை பயிற்சி அளித்தல்; அறிவு வளர்ச்சிக்கான திறவுகோல். • எந்த வயதை கட்டாயக் கல்விக்கான அடிப்படையாக காந்தி நிர்ணயித்திருந்தார் - 6 - 14. • வார்தாவின் சிறப்பம்சங்கள் - 6 - 14 வரை கட்டாய இலவசக் கல்வி; தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில் கல்வி; அனைத்துப் பாடங்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழிலுடன் இணைக்கப்படல்; உற்பத்தியுடன் இணைந்த கல்விச் செயல்முறை; தாய்மொழியே பயிற்றுமொழி; சமயம், நன்னடத்தைக்கு முக்கியத்துவம். • வார்தாவின் தோல்விக்கு காரணங்கள் - சுயசார்புத் தன்மைக்கு முக்கியத்துவம்; ஆதாரக் கல்வி உளவியல் அடிப்படையில் இல்லை- எல்லாப் பாடங்களையும், கைத்தொழிலுடன் இணைக்க முடியாது - இந்தக் கல்வி முறை நகர்ப்புற மாணவர்களுக்கு பொருந்தவில்லை - உலகப்போக்குக்கு பொருந்தவில்லை - அறிவியல், கணிதம் பாடங்களுக்கு முக்கியத்துவம் இல்லை- ஆங்கிலத்திற்கு இடமில்லை - பொதுக் கல்வி அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மை. • நவீன இந்தியத் துறவி என்று அழைக்கப்படுபவர் - ரவீந்திரநாத் தாகூர். • கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பிற்காக நோபல் பரிசு பெற்றது எப்போது - 1913. • தாகூர் கல்விக்கு புதிய வடிவம் கொடுப்பதற்காக வடிவம் கொடுக்க உதவிய அவரின் கல்வி நிலையத்தின் பெயர் - சாந்தி நிகேதன் (1901). • சாந்தி நிகேதன் பின்னாளில் விஷ்வபாரதி பல்கலைக்கழகமாக மாறியது எப்போது - 1921. • தாகூருக்கு நைட் விருது ஆங்கில அரசால் எப்போது வழங்கப்பட்டது - 1915. • நைட் விருதை எதற்காக தாகூர் திருப்பி அளித்தார் - ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து. • தாகூரின் கல்வி நோக்கங்கள் எதை ஒட்டியதாக இருந்தது - உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, ஒழுக்க - ஆன்மிக வளர்ச்சி, சமூக வளர்ச்சியும், பன்னானாட்டு சிந்தனையும். • தாகூரின் கற்பித்தல் முறைகளில் முக்கியமானது - இயற்கையோடு இணைந்த கற்பித்தல் முறை. • தாகூரின் விஷ்வபாரதி பல்கலைக்கழகத்தின் மூன்று நோக்கங்கள் - கீழை நாடுகளின் கலாசாரங்களைப் போதித்தல், கிராம சீரமைப்பு, மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் குறிப்பாக இந்தியாவிற்கும் இடையே பரஸ்பர ஒற்றுமையைப் பேணுதல். • சாந்தி நிகேதனின் பாத் பவனின் சிறப்பு - இங்கு துவக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை அளிக்கப்படுகிறது. • விஷ்வபாரதி பல்கலைக்கழகத்தின் முக்கியப் பிரிவுகள் - வித்யா பவன் (கீழை நாட்டு மொழிகளுக்கு முக்கியத்துவம்), சீன பவன் (சீன மொழிக்கு முக்கியத்துவம்), கலா பவன் (கைத்தொழிலுக்கு முக்கியத்துவம்), சங்கீத் பவன் (இசைக்கு முக்கியத்துவம்), ஹிந்தி பவன்(ஹிந்தி மொழி, இலக்கியத்திற்கு முக்கியத்துவம்), அத்யாபக் சிக்ஷா பவன் (ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம்), ரவீந்திரபவன் (தாகூரின் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம்), இஸ்லாமிய ஆய்வுப் பிரிவு. • இந்தியக் கல்வி மறுமலர்ச்சிக்கு வழிகோலியவர்கள் யார் - காந்திஜி, தாகூர். • அரவிந்தர் பன்னாட்டு பல்கலைக்கழக மையம் உருவான ஆண்டு - 1952. • கல்வியின் உண்மையான அடிப்படை என அரவிந்தர் கூறியது யாது - மன ஆராய்ச்சி. • குழந்தைகளை அரவிந்தர் எப்படி உவமையாகச் சொன்னார் - சுயமேம்பாடு அடையக் கூடிய உயிரி. • அரவிந்தரின் கூற்றுப்படி ஆசிரியர் என்பவர் யார் - கற்றலுக்கு உதவுபவர். • அறிவு வளர்ச்சிக்கான சாதனம் என்று அரவிந்தர் கூறுவது எதை - மனம். • கல்வி எதைப் பெற்றுத்தரும் கருவியாக அரவிந்தர் கூறுகிறார் - ஆன்ம விடுதலையையும்,பொருள் சார்ந்த வாழ்க்கை வளத்தையும். • அரவிந்தர் ஆசிரமப் பள்ளியை முதன் முதலில் எப்போது உருவாக்கினார் - 1943. • ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்படும் ஜே.கே. வாழ்ந்த காலம் - 1896 - 1986 • ஜே. கிருஷ்ணமூர்த்தி ‘குருவின் காலடியில்’ எனும் நூலை எழுதும்போது அவரின் வயது எத்தனை - 16. • ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்வித் தத்துவங்கள் : • குழந்தைகளை அதன் போக்கில் அனுமதித்து அமைதிப்படுத்தும் வழிமுறையே கல்வி. • கல்வி கற்பதற்கு செவிப்புலனால் கேட்பதும், புத்தகங்களைப் படிப்பது மட்டும் போதாது. இதனால், அறிவு திணிப்புத்தான் மிஞ்சும். • பார்த்ததையும், கேட்டதையும், படித்ததையும், அகநிலையில் தன் அனுபவங்களுக்கு ஏற்ப சுயமாக சிந்தித்தலே கற்றல். • பாடக்கூறுகளை ஒட்டுமொத்தமாக இணைத்து, அதைப் பயன்படுத்தி சிந்தித்தாலே நமது தனித்தன்மை வெளிப்படும். அதுவே உண்மையான கற்றல். • ஒரு முக சிந்தனையில் நம் புலன்களின் சக்திகள் அனைத்தும் குறிப்பிட்ட பொருள் அல்லது புள்ளியில் குவிக்கப்படுகிறது. கவனத்தில் அப்படியொரு குவி மையம் இல்லை. • கற்றலில் சுதந்திரம் என்பது தன்னைச் சுற்றியுள்ள யாவற்றையும், அனைத்துக் கருத்துக்களையும், எவ்வித நிர்பந்தமோ, வற்புறுத்துதலோ இன்றி உற்று நோக்கி, அறிந்து பின்னர் யாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஆராயும் தன்மை பெற்றிருத்தலே. • கற்பித்தலிலும், கற்றலிலும் போட்டி இருத்தல் கூடாது. போட்டியானது, அச்சம், வெறுப்பு, தோல்வி, பயம், வன்முறை ஆகியவைகளுக்கு வழிவகுக்கிறது. • எவ்வித நிர்பந்தமும் இன்றி சுயமாக ஆராய்ந்தறியும் மனநிலையைப் பெற்றிருப்பதும், சிந்தித்து சீர்தூக்கி செயல்படுவதும்தான் சுதந்திரம். • அயல்நாட்டு கல்வி சிந்தனையாளர்கள் : • ரூஸோ - குழந்தை மையக் கல்வி குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர். • ஃபுரேபெலின் - கிண்டர் கார்டன். • மாண்டிச்சோரி அம்மையார் - புலப்பயிற்சிக் கல்வி. • வான்டூயின் - முற்போக்குக் கல்வி. • பெர்ட்ரண்டு ரஸ்ஸலின் - மேம்பட்ட சமுதாய நிலைக்கான கல்வி. • ஏ.எஸ்.நீலின் - கோடைமலைப் பள்ளி. வீன் ஜாகுவஸ் ரூஸோ : • நவீனக் கல்வி முறைக்கு வித்திட்டவர் • 1712 ஆம் ஆண்டு ஜெனிவாவில் பிறந்தார். • 1750 ஆம் ஆண்டு கலை மற்றும் அறிவியலின் முன்னேற்றம் என்ற நூலை எழுதினார். • 1753ஆம் ஆண்டு மக்களிடையே சமத்துவத்தின் தோற்றம் என்ற நூலை எழுதினார். • 1762ஆம் ஆண்டு சமூக ஒப்பந்தம், எமிலி அல்லது கல்வியைப் பற்றி - என்ற இரண்டு நூல்களை வெளியிட்டார் (ஐரோப்பாவின் கல்வி நிலைகளை சாடிய நூல்கள் இவை.). • குழந்தையை தனியாக வளர விடுங்கள்; அவன் இயற்கைச் சூழலில் வளரட்டும்; சமூகத்தின் செயற்கைச் சூழல், அவனது இயல்பான வளர்ச்சியைத் தடைசெய்து, முன்னேற்றத்தை தடுக்கின்றது என்பதுதான் இவருடைய தத்துவம். • ரூஸோவின் தத்துவம் எப்படி அழைக்கப்பட்டது - இயற்கைக் கோட்பாடு. • எத்தனை வயது வரை குழந்தைகளைக் காத்திட ரூஸோ வலியுறுத்துகிறார் - 12 வயது வரை. • பயனுள்ள கல்வி என்பது - சுயமுயற்சியாலும், சுற்றுப்புறத்தை ஆராய்ந்தறிதலாலும் பெற்றிடுவதே ஆகும். • குழந்தைகள் ஒழுக்கத்தை எப்படி கற்றுக்கொள்வார்கள் என்று ரூஸோ கருதுகிறார் - இயற்கையின் விளைவுகளில் இருந்து குழந்தைகள் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக்கொள்வர். • சொல்வழிக் கற்றல் என்பது - நினைவுச் சுமையை மட்டுமே அதிகரிக்கச் செய்யும்.; உண்மையான கற்றல் நிகழாது. • எமிலி அல்லது கல்வியைப் பற்றி நூலில் எமிலி என்பது என்ன - அந்தக் கதையில் வரும் கற்பனைச் சிறுவனின் பெயர். • புரோபெலின் என்பவர் - ஜெர்மானியக் கல்வியாளர் • கிண்டர்கார்டன் எனப்படும் பாலர் கல்வியின் தந்தை என அழைக்கப்படுபவர் - ஃபுரோபெல் • கிண்டர் கார்டன் என்பது -குழந்தைகள் பூங்கா. • கருத்தியல் என்பது - லட்சியம். • கிண்டர்கார்டனின் முதன்மைக் கூறுகள் - சுயமான செயல், படைப்பாற்றல், சமூகப் பங்கேற்பு. • ஜேக் அண்ட் ஜில், ஹம்டி டம்டி, சின்ட்ரலா போன்ற நர்சரி குழந்தைகளின் பாடல்களை எழுதியது - புரோபெல். • உலகில் முதல் குழந்தைப் பூங்கா பள்ளியைத் தோற்றுவித்தவர் - புரோபெல் • வாருங்கள் நாம் குழந்தைகளுக்காக வாழ்வோம்’ என்ற பொன்மொழியை உதிர்த்தவர் - புரோபெல். மாண்டிசோரி அம்மையார் - • இத்தாலி நாட்டு மருத்துவர் • குழந்தைகள் வீடு எனும் பள்ளியை முதன் முதலில் இவர் தொடங்கிய ஆண்டு 1907. • மாண்டிசோரி அம்மையார் இந்தியா வந்த ஆண்டு - 1940. • இவரின் முக்கியக் கோட்பாடுகள் : தனிநபர் வளர்ச்சி, புலப்பயிற்சி, சுய கற்றல். • மாண்டிசோரி முறை செயல்படும் விதம்: • பிரதியேகமாக உருவாக்கப்பட்ட கற்றல் சூழல். • ஆசிரியரின் நேரடிப் பார்வையில் சுய கற்றல். • உணவருந்த, ஓய்வெடுக்க, சுய கற்றல் சாதனங்களை இயக்கிக் கற்க தனித்தனி அறைகள். • நிலையான பாட வேளைகள் கிடையாது. • குழந்தைகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப எந்தச் செயலிலும் ஈடுபட சுதந்திரம் உண்டு. • மாண்டிசோரி கல்வியில் ஆசிரியர்கள் எப்படி அழைக்கப்படுகின்றர் - இயக்குநர். • 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கற்பித்தல் முறைகளில் பாரம்பரியப் போக்குகளிலிருந்து முற்போக்கான அணுகுமுறைகள் தோன்றத் துவங்கியதற்கு காரணம் - ஜான் டூயி. • கல்வியில் ஆராய்ச்சிப் போக்கைத் துவக்கி வைத்த பெருமை யாரைச் சேரும் - ஜான் டூயி. • டூ யியின் பொதுத் தத்துவங்கள்: எதுவும் தற்காலிகமானவையே, உண்மைகளும் மாற்றத்திற்குட்பட்டவையே, இறுதி மதிப்புகள் என்று எதுவுமேயில்லை, மனித வாழ்க்கை சோதனைகளும் நோக்கத்தோடு கூடிய செயல்களின் தொடராகும். • டூயி எம்முறைக் கல்வியை ஆதரித்தார் - செயல்வழிக் கற்றல். • எந்த ஆண்டு நவோதயா பள்ளிகள் இயங்க ஆரம்பித்தன - 1986. • நவோதயா பள்ளிகளுக்கு இன்னொரு பெயர் - முன்னோடிப் பள்ளி. • எந்தப் பரிந்துரைப்படி நவோதயாப் பள்ளிகள் கொண்டுவரப்பட்டன - இந்திய தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைப்படி. • முன்னோடிப் பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டுகள் - சமுதாயப்பள்ளிகள், பிரான்சிஸ் பார்கள் பள்ளி, டூயி சோதனைப்பள்ளி, வால்டார்ஜஃப் பள்ளிகள். • சுதந்தரப் பள்ளிகள் இயக்கம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது - 1960. • சுதந்தரப் பள்ளிகளுக்கு மற்றொரு பெயர் - திறந்தவெளிப் பள்ளி. • சுதந்தரப் பள்ளி எதற்கு எதிராக தொடங்கப்பட்டது - அமெரிக்கப் பொதுப்பள்ளி கல்வி முறைக்கு எதிராக. • சமுதாயப் பள்ளிகள் எந்தக் கல்வியை வற்புறுத்தின - தொழிற் கல்வியை • சமுதாயப் பள்ளிகளின் வகைகள் - சமுதாயத்தில் நிலவும் தொழில்களையே பாடச் செயல்களாக அமைத்தல், சமுதாயப் பிரச்சினைகளில் பெரியவர்களோடு ஒத்துழைக்கும் வகையில் மாணவர்களிடம் சமுதாயத்திறன்களை வளர்த்தல், சமுதாயத்தில் காணப்பட்ட மேம்பட்ட பண்புகள், செயல்கள் அனைத்தையும் சிறிய வகையில் பிரதிபலிக்குமாறு பள்ளிகளை அமைத்தல், சமுதாயப் பள்ளிகளை முன்னேற்றிடவும், விரிவுபடுத்திடவும் பள்ளிகள் செயல்படுதல். • முற்போக்குக் கல்வியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் -பிரான்சிஸ் பார்க்கர். • பிரான்சிஸ் பார்க்கர் முதன்முதலில் அறிமுகப்படுத்திய கல்வி முறை - குழந்தை மையப் போக்கு கொண்ட முற்போக்குக் கல்வி முறை. • குழந்தை ஒரு தெய்வீகப் பிறவி என்று கூறியவர்கள் யாவர் - பிரான்சிஸ் பார்க்கர், ரூஸோ. • பிரான்சிஸ் பார்க்கர் கல்வி முறையில் நேரிடைக் களப் பயணங்கள் மூலம் அறிவியலும், புவியியலும் கற்பித்தல் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது - குவின்ஸி. • வால்டார் ஐஃப்க் கல்வி முறையை அறிமுகப்படுத்தியவர் - ரூடால்ஃப் ஸ்டெய்னர். • ரூடால்ஃப் ஸ்டெய்னருக்கு கல்வி வளர்ச்சியில் ஊக்கமளித்த இந்திய கல்வியாளர் - பிளாவட்ஸ்கி அம்மையார். • டூயி சோதனைப்பள்ளி எங்கு எந்த ஆண்டு துவங்கப்பட்டது - 1896 ஆம் ஆண்டு சிகாகோவில் தொடங்கப்பட்டது. • அண்மைப் பள்ளிகளுக்கான கருத்தினை கோத்தாரிக் கல்விக் குழு முதன் முதலில் எந்த ஆண்டுகளில் வெளியிட்டது - 1964 - 66 அண்மைப் பள்ளிகளின் நன்மைகள் • பல்வேறு தரப்பட்ட குழந்தைகள் ஒரே பள்ளியில் சேர்ந்து பயிலுவதால், குழந்தைகளிடம் சிறந்த அனுபவப் பகிர்வு நல்ல கல்விக்கு அடிப்படை. • பணக்காரக் குழந்தைகளும், அதிகார வர்க்கத்திலுள்ளோரின் குழந்தைகளும் ஒன்றாகப் படிப்பதால், அவர்கள் கல்வித் தரத்தையும், பள்ளித் தரத்தையும் உயர்த்திட முனைந்திடுவர். பள்ளியின் குறைகளைக் களைந்து அப்பள்ளியின் முன்னேற்றத்திற்கும் முயற்சி செய்வர். • தொடக்கப் பள்ளிகளின் தற்போதைய கல்வித் தரம் உயர்த்தப்படும். பள்ளிச்சாராக்கல்வி என்பது
பெற்றோர் சங்கம் அமைத்தலில் நோக்கம் -
ஆசிரியரின் சமூகத் தொண்டுகள் -
பள்ளிச்சீரமைப்புத் திட்டம் என்பது -
பள்ளிக் கண்காட்சி என்பது -
பள்ளி இணைப்புத் திட்டத்தின் பயன்கள் -
பணியிடைப் பயிற்சியின் நோக்கம் -
கல்விப் பயணங்கள் என்பது -
கல்விப் பயணத்தின் நன்மைகள் -
ஊர்களின் பெயர்கள் சிறப்பம்சங்கள்
திருப்பதி சந்தனக் கற்கள் கும்பகோணம் பாத்திர வேலை திருச்செங்கோடு கற்சட்டிகள் சீர்காழி கோரைப்பாய்கள் பண்ருட்டி மண் பொம்மைகள் கீழக்கரை பனையோலைப் பெட்டிகள் தூத்துக்குடி பனைவெல்லம் கடப்பை தட்டைக் கற்கள் மங்களூர் கூரையோடுகள்
பள்ளியின் அங்கீகாரம் அரசாங்கத்தால் ரத்து செய்யும் காரணங்கள் -
கலை, தொழில் உள்ளடங்கிய பாடங்கள்-
பள்ளியில் கலையும் கைத்தொழிலும் மாணவர்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது-
விளக்கிக் கூறுதலின் நன்மைகள் -
வினாக்கள் கேட்கும் முறை -
ஆசிரியர் வினாக்கள் கேட்பதால் ஏற்படும் பயன்கள்?
விவாதித்தலின் குறைபாடுகள் -
வாசித்தலின் நன்மைகள் -
சுயநோக்கு முறையின் சில திட்டங்கள் -
1. நோக்கம் 2. திட்டமிடல்
3. செயலைச் செய்து முடித்தல் 4. மதிப்பிடல்
செயலைத் செய்து முடித்தல் என்பது..
சுயநோக்கு முறையின் நன்மைகள் -
பாட முறையின் மூன்று நிலைகள் -
1. முன்னுரை 2. கற்பித்தல் 3. திருப்புதல்
தொழிற்கூடப் பேச்சு முறை என்பது -
திறன் வகைப் பாடத்தின் படிகள் -
1. ஆயத்தம் 2. விளக்குதல் 3. விதிகளைக் கூறல்.4. பயிற்சி அறிவு வகைப் பாடத்தின் படிநிலைகள் - 1. முன்னுரை 2. ஆயத்தம் 3. விளக்குதல் 4. பயிற்சி. கிண்டர் கார்டன் முறை -
கற்பிப்பதில் படங்களை ஏன் பயன்படுத்த வேண்டும் - மனதில் நிலைநிறுத்த.
சிறந்த பாடப் புத்தகங்கள் என்பது -
வானொலியின் நோக்கம் -
அறிவுவகைப் பாடங்களின் படிநிலைகள்:
1) ஆயத்தம் அல்லது தயார் செய்தல் 2) முன் வைத்தல் 3) விளக்கமளித்தல் 4) ஒருங்குபடுத்துதல் 5) கற்றவைகளை நடைமுறைப்படுத்துதல் திறன்வகைப் பாடங்களின் படிநிலைகள் : 1) திட்டமிடல் 2) தயாரித்தல் 3) வேலை செய்தல் 4) வேலையை முடித்தல் 5) பதிவு செய்தல் 6) மதிப்பிடுதல் சுவையுணர்வு வகைப் பாடங்களின் படிநிலைகள்: 1) ஆயத்தம்; 2) விளக்குதல் 3) ஆராய்தல்
அ) மேல்நிலை (நன்று)
ஆ) நடுத்தரம் (சுமார்) இ) கடை நிலை (மோசம்)
பல்வேறு சோதனையின் வகைகள்
1. வாய்வழிச் சோதனை 2. எழுத்துச் சோதனை 3. செய்து காட்டும் சோதனை
சோதனைகளின் வகைகள்
1. நுண்ணறிவுச் சோதனை 2. தனிவிருப்பச் சோதனை 3. திறன் அறிய விரும்பும் சோதனை 4. கவர்ச்சிச் சோதனை 5. குறையறிவுச் சோதனை 6. முன்னறிவுச் சோதனை 7. எழுத்துச் சோதனை 8. படச் சோதனை 9. வாய்வழிச் சோதனை 10. செயல் திறன் சோதனை
11. தனியாளியல் சோதனை
தேர்வு நடத்துவதின் அவசியம் -
தேர்வுகளின் குறைபாடுகள் -
அடிக்கடி தேர்வு நடத்துவதால் மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படும்.
புதிய வினாத்தாள் முறைகள் -
பழைய வினாத்தாளின் குறைகள் -
புதுமாதிரி வினாக்களின் சிறப்புகள் -
புதுமாதிரி வினாக்களின் குறைகள் -
|
Subscribe to:
Posts (Atom)