தேர்தல் விதிகள் பொருந்துமா?
2014-15-ம் ஆண்டில் நடத்த வேண்டிய தேர்வுகள் குறித்த வருடாந்திர தேர்வுபட்டியலை டி.என்.பி.எஸ்.சி. ஏற்கெனவே வெளியிட்டுவிட்டது. குரூப்-2 தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டியுள்ளது. அதுமட்டு மல்லாமல் வருடாந்திர தேர்வுபட்டி யலின்படி, வி.ஏ.ஓ. தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகள் குறித்த அறிவிப்பையும் அது வெளியிட வேண்டும்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் புதன்கிழமை காலை வெளியிட்டது.
எனவே, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த சூழ்நிலையில், நடத்தை விதிகளால் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை வெளியிடுவதும், புதிய தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதும் பாதிக்கப்படுமா என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமாரிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “என்னென்ன தேர்வுகளுக்கு எப்போது அறிவிப்பு வெளியிடப்படும், எப்போது தேர்வுகள் நடத்தப்படும் என்பது தொடர்பான வருடாந்திர தேர்வுபட்டியலை முன்னரே வெளியிட்டுவிட்டோம். எனவே, தேர்தல் நடத்தை விதிகள் அவற்றை கட்டுப்படுத்தாது” என்றார்.
No comments:
Post a Comment